காணாமல் போன 8 படகுகளையும் கரை சேர்க்க நடவடிக்கை!
ஆழ்கடலில் மீன்பிடிக்க சென்ற மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். சென்னையில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் ஆழ் கடலுக்கு செல்லும் படகுகளுக்கு சாட்டிலைட் மொபைல் வழங்க அரசு தயாராக இருப்பதாக கூறினார். மீனவர்கள் தரையிலிருந்து கிட்டத்தட்ட 1000 கிலோ மீட்டர் தள்ளி தொழில் செய்து வருவதாகவும் சுட்டிக்காட்டினார்





