--- --:--:-- --

மே.வங்கத்தில் 18 ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் அதிகாரிகள் இடமாற்றம்..!

10

ட்டப்பேரவைத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள மேற்கு வங்கத்தில் மேலும் 13 மாவட்ட ஆட்சியர்களும் 5 டிஐஜிக்களும் இடமாற்றம் செய்யப்பட்டு உள்ளனர். 294 தொகுதிகளைக் கொண்ட மேற்கு வங்கத்திற்கு ஏப்ரல் 23, 29 தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெறவுள்ளது.

 

152 தொகுதிகளுக்கு முதல் கட்டமாகவும் 142 தொகுதிகளுக்கு இரண்டாவது கட்டமாகவும் தேர்தல் நடைபெறுகிறது. மே 4 அன்று வாக்கு எண்ணிக்கை நடைபெறும். தேர்தல் அறிவிக்கப்பட்டவுடன் மேற்கு வங்கத்தில் நேற்று 19 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

 

நள்ளிரவில் அதிகாரிகள் மாற்றம் செய்யப்படுவதாக மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தொடர்ந்து இன்றும்(மார்ச் 18) 13 மாவட்ட ஆட்சியர்கள், 5 டிஐஜிக்களை மாற்றி தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Right Menu Icon