--- --:--:-- --

தி.மு.க. ஐ.டி.விங்கால் துன்புறுத்தல்.. எழுத்தாளர் மீனா கந்தசாமி புகார்..!

9

ந்தத் தாக்குதல்களுக்குப் பச்சைக்கொடி காட்டியவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கடந்த சில ஆண்டுகளாக நான் மனதளவில் உடைந்து, மௌனமாக்கப்பட்டேன். தன்னைத் தரக்குறைவாகப் பேசிய நபர்களில் ஒருவருக்கு, முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் அதிகாரப்பூர்வ கணக்கிலிருந்தே இரங்கல் செய்தி பகிரப்பட்டதை அறிந்து தான் அதிர்ச்சியடைந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

தனது பதிவு வைரலான பிறகு, டி.ஆர்.பி. ராஜாவின் அலுவலகத்திலிருந்து தமக்கு அழைப்புகள் வருவதாகவும், ஆனால் அவர் இதுவரை சைபர் தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கவோ அல்லது மன்னிப்பு கேட்கவோ இல்லை என்றும் கூறியுள்ள மீனா கந்தசாமி, இதற்கு நேர்மாறாக, நாம் தமிழர் கட்சி (NTK) உறுப்பினர்கள் சிலர் இது போன்ற தாக்குதலை நடத்தியபோது, சீமான் தன்னிடம் பேசி, “நீங்கள் செய்வது சரியே, இனி இது போன்ற சம்பவங்கள் நடக்காது” என்று உறுதியளித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

 

தமிழகத்தில் ஆளும் திமுக அரசின் முக்கியப் பொறுப்பில் இருப்பவர்கள், தங்களை எதிர்த்து கேள்வி கேட்கும் பெண்களை இணையதள கூலிப்படையை கொண்டு தரக்குறைவான சொற்களால் பேசுவதும், துன்புறுத்துவதும் தான் நீங்கள் பெண்ணியம் போற்றும் லட்சணமா?

 

இச்சம்பவம் குறித்து அ.தி.மு.க.வின் தகவல் தொழில்நுட்பப் பிரிவு வெளியிட்டுள்ள பதிவில், “தங்களைக் கேள்வி கேட்கும் பெண்களைச் சித்திரவதை செய்ய சைபர் அடியாட்களைப் பயன்படுத்துவதுதான் தி.மு.க போற்றும் பெண்மையா?” என்று கேள்வி எழுப்பியுள்ளது.

 

இதனிடையே, தமிழகத்தில் பெண்களின் பாதுகாப்பு குறித்த விவாதங்கள் எழுந்துள்ள நிலையில், நாம் தமிழர் கட்சி போன்ற கட்சிகள் இது போன்ற தவறான நடத்தைகள் மீது விரைவாக நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார். மீனா கந்தசாமி, இந்தக் குற்றச்சாட்டு எதிர்க்கட்சிகளிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் திமுக ஐடி விங் (IT wing) நச்சுத்தன்மையுடன் செயல்படுவதாகக் குற்றம் சாட்டியுள்ளனர். தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அமைச்சரிடமிருந்து இதுவரை எந்தப் பதிலும் வரவில்லை.

Right Menu Icon