தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சீமான்!
2026 ம் ஆண்டிற்கான சட்டமன்ற தேர்தல் வரவுள்ள நிலையில், நாம் தமிழர் கட்சியின் தேர்தல் அறிக்கையை அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வெளியிட்டுள்ளார். 49 தலைப்பில், 462 பக்கத்தில் தேர்தல் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
தலைநகரை மாற்றுவோம் தமிழகத்தை மாற்றவோம், அடிப்படை அமைப்பு அரசியல் மாற்றம், தன்னலமற்ற அன்பான சர்வாதிகாரம், நீர்வள பெருக்கம் ,தூய குடிநீர் இலவசம், மருத்துவம், மாற்றுத்திறனாளிகள் நலன் ,பெண்ணுரிமை, போக்குவரத்துக் கொள்கை என பல்வேறு தலைப்புகளில் தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.தொடர்ந்து மேடையில் பேசிய அவர், 15 ஆண்டுகளாக அரசியல் களத்தில் இருக்கிறோம்.
10 ஆண்டுகளாக தேர்தல் களத்தில் இருக்கிறோம். பணம் இருப்பவர்கள் தான் அரசியல் செய்ய வேண்டும் என்பதை மாற்றி மனம் இருப்பவர்களுக்கும் தேர்தலில் நிற்க வேண்டும். உலகம் முழுவதும் நேசித்து வந்த பேரினத்தின் பிள்ளைகள் இந்த உலகத்தில் இருந்து தான் வாழப்பழகினான், தேர்தல் அறிக்கை என்று இல்லாமல் ஆட்சியின் செயற்பாட்டு வரைவு கொடுக்கப்பட உள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் – தமிழின் நீதிமன்ற மொழி வழக்காடு வழியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் உச்ச நீதிமன்ற கிளை அமைக்க வேண்டும், தேர்தலில் மின்னணு வாக்குப்பதிவேந்திரத்தை பயன்படுத்த கூடாது. வாக்குச் சீட்டு முறை கொண்டு வர வேண்டும் என கூறினார்.ற்போது இருக்கும் தமிழ்நாடு அரசு முத்திரைக்கு பதிலாக, பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற வாசகத்துடன் திருவள்ளுவரின் புகைப்படத்துடன் கூடிய முத்திரை இடம்பெறும் எனக் கூறப்பட்டுள்ளது.






