--- --:--:-- --

தொகுதி பங்கீட்டுக்கு முன்பே திமுக வேட்புமனு தாக்கல்..!

3

புதுச்சேரியில் காங்கிரஸ் கட்சி உடன் தொகுதி பங்கீட்டு ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகாத நிலையில் திமுக சார்பில் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. புதுச்சேரியில் காங்கிரஸ் – திமுக கட்சிகள் கூட்டணி அமைத்து சட்டப்பேரவை தேர்தலை எதிர்கொள்ள உள்ளனர்.

 

காங்கிரஸ் – திமுக இடையே தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இறுதி செய்யப்படாமல் நீடித்து கொண்டிருக்கிறது. இதனிடையே தொகுதிகள் இறுதியாகாத போதும் வேட்புமனு தாக்கல் திமுக தொடங்கி உள்ளது.
புதுச்சேரி முதலியார்பேட்டை பகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து திமுக எம்எல்ஏ சம்பத் சாரம் வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.

 

பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இயங்கிவரும் துணை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். இதனிடையே திமுக – காங்கிரஸ் இடையேயான தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை இன்று இறுதியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Right Menu Icon