--- --:--:-- --

வேலூரில் சதமடித்த வெயில்..!

2

வேலூரில் வெயில் சதமடித்ததால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.தமிழ்நாட்டில் கோடை வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் நேற்று 100.9 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பம் பதிவானது. அனல் காற்று வீசியதால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.

 

அதேபோல், சேலத்தில் 99.7 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் பதிவானது. இந்நிலையில், வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நீலகிரி, கோவை மாவட்டங்களில் இன்று முதல் 3 நாட்களுக்கு லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது.

 

நாளை மறுதினம், தென்தமிழக கடலோர மாவட்டங்களிலும் லேசான மழை பெய்யக் கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. மேலும், 9ஆம் தேதியன்று மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசான மழை பெய்யக்கூடும் என கூறப்பட்டுள்ளது.

 

இன்றும், நாளையும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் அதிகாலையில் லேசான பனிமூட்டம் காணப்படும் என்றும், சென்னையைப் பொறுத்தவரை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் அதிகபட்ச வெப்பநிலை, 2 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாகவும் வானிலை மையம் கணித்துள்ளது.

Right Menu Icon