செல்வ மகள் சேமிப்பு திட்டத்தில் கணக்கு ..!
ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் குழந்தைகளுக்கு நல்ல எதிர்காலத்தை அமைத்து கொடுக்க வேண்டும் என்று விரும்புகின்றனர். அதேபோன்று, கல்வி, திருமணம் போன்ற முக்கியமான விஷயங்களில் எந்த நிதிச் சிக்கல்களையும் சந்திக்கக்கூடாது என்பதை நினைத்தும் சில பெற்றோர்கள் வருந்துகிறார்கள். அவர்களுக்கான ஒரு சிறந்த சேமிப்பு திட்டம் உள்ளது.
உங்கள் மகளின் எதிர்காலத்தை நிதி ரீதியாகப் பாதுகாப்பாக மாற்ற மத்திய அரசு வழங்கும் ஒரு அற்புதமான திட்டம் தான் இது. அதுதான் செல்வ மகள் சேமிப்பு திட்டம் (சுகன்யா சம்ரிதி யோஜனா) ஆகும். இந்த திட்டம் பற்றி தற்போது விரிவாக தெரிந்து கொள்வோம். ககன்யா சம்ரித்தி யோஜனா எனும் இந்திய அரசின் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் 18 வயதுக்குட்பட்ட பெண் குழந்தைகளுக்காக தொடங்கப்பட்ட மத்திய அரசின் திட்டமாகும்.
பெண் குழந்தைகளின் கல்வி மற்றும் திருமண செலவுகளை ஈடுசெய்யும் இந்த திட்டம், 2015ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. ஒரு பெண் குழந்தை பிறந்தது முதல் 10 வயதாகும் வரை எந்த நேரத்திலும் அந்த பெண் குழந்தையின் பெயரில் பெற்றோர் அல்லது சட்டப்பூர்வ பாதுகாவலர் கணக்கை திறக்கலாம். இது அரசாங்கத்தால் வழங்கப்படும் மிகவும் நம்பகமான மற்றும் லாபகரமான சேமிப்புத் திட்டங்களில் ஒன்றாகும்.
இதில், பெற்றோர்கள் தங்கள் மகளின் பெயரில் ஒரு கணக்கைத் திறந்து, சிறிது சிறிதாக முதலீடு செய்து, 21 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெரிய தொகையை உருவாக்கலாம். இந்தத் திட்டத்தின் வட்டி விகிதம் சந்தையில் உள்ள வழக்கமான வங்கி நிலையான வைப்புத் தொகையை விட அதிகமாகும். மேலும், இதில் முதலீடு செய்வதன் மூலம், உங்களுக்கு வரி இல்லாத வருமானம் கிடைக்கும்.
அசத்தலான திட்டம்… இந்தத் திட்டம் கடந்த ஜனவரி 22ஆம் தேதி அன்று 11 ஆண்டுகளை நிறைவு செய்யது. இதன் மூலம் மக்கள் இந்த திட்டத்தின் மீது எவ்வளவு நம்பிக்கை வைத்திருக்கிறார்கள் என்பது தெளிவாகிறது. மேலும், இந்த திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து 4.53 கோடிக்கும் அதிகமான கணக்குகள் திறக்கப்பட்டுள்ளன.
செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது மிக உயர்ந்த வட்டி விகிதமாகக் கருதப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அரசாங்கத்தால் ஒவ்வொரு காலாண்டிலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்க ரூ.250 மட்டும் போதும். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகையை ஒரே தொகையாகவோ அல்லது தவணைகளாகவோ செலுத்தலாம்.
வட்டி விகிதம் எவ்வளவு? செல்வ மகள் சேமிப்புத் திட்டம் தற்போது ஆண்டுக்கு 8.2% வட்டி விகிதத்தை வழங்குகிறது. இது மிக உயர்ந்த வட்டி விகிதமாகக் கருதப்படுகிறது. இந்த வட்டி விகிதம் அரசாங்கத்தால் ஒவ்வொரு காலாண்டிலும் தீர்மானிக்கப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் கணக்கைத் திறக்க ரூ.250 மட்டும் போதும். அதிகபட்சம் ரூ.1.5 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம். இந்தத் தொகையை ஒரே தொகையாகவோ அல்லது தவணைகளாகவோ செலுத்தலாம்.
இந்தத் திட்டத்தில், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வைப்புத்தொகை செலுத்த வேண்டும். உங்கள் மகளுக்கு 21 வயது ஆகும்போது முழு முதிர்வு காலம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் வட்டி தொடர்கிறது. அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் டெபாசிட் செய்ய அவசியமில்லை. ஆனாலும், இதற்கு வட்டி வசூலிக்கப்படாது. அது தொடர்ந்து வளரும்.
வைப்புத்தொகை ரூ.3.33 லட்சம் கோடிக்கு மேல்… இந்தத் திட்டத்தின் பிரபலத்திற்கு எடுத்துக்காட்டாக, செல்வமகள் சேமிப்பு திட்டத்தின் கீழ் மொத்த வைப்புத்தொகை டிசம்பர் 2025 நிலவரப்படி ரூ.3.33 லட்சம் கோடியை தாண்டியுள்ளது. நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் இந்தத் திட்டத்தில் எவ்வளவு நம்பிக்கை கொண்டுள்ளன என்பதை இது தெளிவாகக் காட்டுகிறது.
இந்தத் திட்டத்தில், கணக்குத் தொடங்கிய நாளிலிருந்து 15 ஆண்டுகளுக்கு மட்டுமே வைப்புத்தொகை செலுத்த வேண்டும். உங்கள் மகளுக்கு 21 வயது ஆகும்போது முழு முதிர்வு காலம் ஆகும். இந்தக் காலகட்டத்தில் வட்டி தொடர்கிறது. அதாவது 15 ஆண்டுகளுக்குப் பிறகு நீங்கள் டெபாசிட் செய்ய அவசியமில்லை. ஆனாலும், இதற்கு வட்டி வசூலிக்கப்படாது. அது தொடர்ந்து வளரும்.






