பிளாக் டிக்கெட் ஊழலையே உங்களால் ஒழிக்க முடியவில்லை – விஜயை விமர்சித்த தினகரன்
அ.தி.மு.க-வை விஜய் விமர்சித்தது குறித்து டி.டி.வி தினகரனிடம் கேள்வி கேட்கப்பட்டது. அப்போது டி.டி.வி தினகரன், புரட்சித் தலைவர் புகைப்படத்தை போட்டுக் கொண்டு எங்கள் கட்சியை ஊழல் கட்சி என்கிறார். உங்க படத்துக்கு பிளாக் டிக்கெட் விற்கிறார்கள்.
அந்த ஊழலையே உங்களால் ஒழிக்க முடியவில்லை என்று சமூக வலைதளத்தில் விஜய் குறித்து கேள்வி கேட்கிறார்கள். அது சரியான கேள்வி தான் என எனக்கு தோன்றியது. முதலில் வீட்டில் இருந்து வெளியே வாருங்கள் என்றார்.






