--- --:--:-- --

வாணியம்பாடியில் நகரமன்ற உறுப்பினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் இல்லை என மனு..!

11

வாணியம்பாடியில் நகரமன்ற உறுப்பினர் உட்பட 50க்கும் மேற்பட்டோர் வார்டு பகுதியில் இல்லை என்றும், அவர்களை நீக்கம் செய்ய வேண்டும் என அரசியல் கட்சியினர் மனு அளித்ததால் நகரமன்ற உறுப்பினர் மற்றும் பொதுமக்கள் அதிர்ச்சி.

 

வாணியம்பாடி, ஜன.21- திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட 8 வது வார்டு உறுப்பினராக இருப்பவர் சி.முஹம்மத் நௌமன், இவர் சுயேட்சையாக தேர்ந்தெடுக்கப்பட்டவர், பூத் எண் 76,77 ஆகியவற்றில், நகராட்சி வார்டு உறுப்பினர், முஹமது நௌமன் மற்றும் 50க்கும் மேற்பட்டோர் இந்த வார்டு பகுதியில் இல்லை என்றும், அவர்களை நீக்கம் செய்ய வேண்டும் என, அரசியல் கட்சி சார்பில் படிவம் 7 வருவாய் கோட்டாட்சியிரிடம் அளித்துள்ளனர்.

 

இது குறித்து நகர்மன்ற உறுப்பினர், முஹமது நௌமன் மற்றும் பொதுமக்கள், வாணியம்பாடி நகராட்சி முஸ்லீம் நடுநிலைப்பள்ளியில் வாக்குசாவடி அலுவலர்களிடம் வாக்குவாதம் செய்தனர், இதே போல் வாணியம்பாடி நகராட்சிக்குட்பட்ட பல்வேறு வார்டு பகுதிகளிலும் இதே போல் மனு அளித்துள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என நகர்மன்ற உறுப்பினர் மற்றும், பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

மேலும் கடந்த 20.01.2026 தேதிவரை திருப்பத்தூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் படிவம் 6,7 மற்றும் 8 வகையில் மொத்தம் 38447 எண்ணிக்கையிலான படிவங்கள் மட்டுமே பெறப்பட்டு அதில் 29075 படிவங்கள் விசாரித்து முடிவுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.

 

இன்னமும் 9372 எண்ணிக்கையான படிவங்கள் சரி பார்த்து முடிவுக்கு கொண்டு வர வேண்டியதாக உள்ளது..இவை அனைத்திற்கும் மேலாக தேர்தல் ஆணையம் வெளியிடப்பட்ட மாதிரி வாக்காளர் பட்டியலில் பெயர் இருந்தாலும் கூட, விவரங்கள் பொருந்தவில்லை (NO Mapping) என்பதாக வாணியம்பாடி சட்டமன்றத் தொகுதியில் 79375, ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் 52020 , ஜோலார்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் 57940 திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதியில் 56481 என மொத்தம் 245836 எண்ணிக்கையில் ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும் மூன்றில் ஒரு பங்கு வாக்காளர்கள் விவரங்கள் பொருந்தவில்லை என்பதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

 

இவர்கள் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ள 13 ஆவணங்களில் ஒரு ஆவணங்களை சமர்ப்பித்து தங்களின் வாக்குகளை உறுதிப்படுத்திக் கொண்டால் மட்டுமே இறுதி வாக்காளர் பட்டியலில் இவர்கள் பெயர் தொடருமே தவிர இல்லாமல் போனால் இறுதி வாக்காளர் பட்டியலில் இவர்கள் பெயர் இடம் பெறாத சூழல் ஏற்படும் என்பதை உணர்ந்து வர 30-ம் தேதி வரையிலான அவகாச காலத்திற்குள் தங்களின் வாக்குகளை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று அரசியல் கட்சியினர் மற்றும் சமூக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

Right Menu Icon