--- --:--:-- --

ஜாப்ராபாத் ஊராட்சியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அமுல்படுத்த கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம்!

9

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஜாப்ராபாத் ஊராட்சியில் ஒகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை அமுல்படுத்த கோரி மனிதநேய மக்கள் கட்சி சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டம் ஆட்டோ ஸ்டான்ட் பகுதியில் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்திற்கு மனிதநேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் டி. இக்பால் தலைமை வகித்தார். துணைச் செயலாளர்கள் ஏ.கலீம் பாஷா,
பி.முஹம்மது அனீஸ், கே.அஷ்வாக் அஹ்மத் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மனிதநேய மக்கள் கட்சி ஜாப்ராபாத் கிளை துணைத்தலைவர் இர்பாஸ் அனைவரையும் வரவேற்றார்.

இதில் சிறப்பு அழைப்பாளர்களாக மாவட்ட தலைவர் வி.ஆர். நஜீர் அஹ்மத், தலைமை கழக பேச்சாளர் சி.கே.சனாவுல்லா,தமுமுக மாவட்ட செயலாளர் V.Z.வர்தா அப்துல் ஷுகூர் ஆகியோர் கலந்து கொண்டு ஆர்பாடத்தை தொடங்கி வைத்து ஊராட்சியில் ஒகேனக்கல் கூட்டுக்
குடிநீர் திட்டத்தை அமுல்படுத்த வலியுறுத்தி சிறப்புரையாற்றினர்.

 

ஆர்பாட்டத்தில் தமுமுக, மனித நேய மக்கள் கட்சி நிர்வாகிகள்,கிளை நிர்வாகிகள், தொண்டர்கள் மற்றும் பகுதி மக்கள் ஆகியோர் கலந்து கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டத்தை ஊராட்சி பகுதியில் அமுல்படுத்த வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்து கோஷங்களை எழுப்பி ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். முடிவில் ஆலங்காயம் ஒன்றிய தமுமுக துணைச் செயலாளர் எம்.நாசீர் அஹ்மத் நன்றி கூறினார்.

Right Menu Icon