--- --:--:-- --

தமிழகத்தில் இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா

6

மிழகத்தில் இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன் பதில் அளித்தார். தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது பேசிய, திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி, எலவம்பட்டி, மதுரா மைக்காடு மற்றும் ஜெகன்நாதன் வட்டம் பகுதிகளில் வசிப்பவர்களுக்கு வீட்டுமனை பட்டா வழங்க அரசு நடவடிக்கை எடுக்குமா என்று கேள்வி எழுப்பினார்.

 

இதற்கு பதில் அளித்த, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர் ராமசந்திரன், தற்போது வரை இந்த ஆட்சியில் இதுவரை 22 லட்சம் பேருக்கு பட்டா வழங்கப்பட்டுள்ளது. எனவே இவர்களுக்கும் பட்டா வழங்குவதற்கான வழிவகைகளை இந்த அரசு ஆராய்ந்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று பதில் அளித்தார்.

Right Menu Icon