வங்கதேச முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா காலமானார்..!
வங்கதேச முதல் பெண் பிரதமர் கலிதா ஜியா, உடல்நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 80.. வங்கதேசத்தின் முன்னாள் பிரதமரும், முதல் பெண் பிரதமருமான கலிதா ஜியா, அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ZIAUR ரஹ்மானின் மனைவியாவார். 1981ஆம் ஆண்டு தனது கணவர் கொல்லப்பட்ட பிறகு வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவராக கலிதா பொறுப்பேற்றார்.
பின்னர் 1991ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமரானார். பிறகு 2001ஆம் ஆண்டு அந்நாட்டின் பிரதமராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார்.
நடப்பாண்டு தொடக்கம் முதல் அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நவம்பர் 23ஆம் தேதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். டிசம்பர் மாத தொடக்கத்தில் அவரது உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
அந்நாட்டில் அசாதாரண சூழல் நிலவி வரும் நிலையில், அவரை வெளிநாட்டிற்கு அழைத்து சென்று சிகிச்சை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது. ஆனால் விமான பயணம் மேற்கொள்வது உடல்நிலையை மேலும் மோசமாக்கும் என மருத்துவர்கள் கூறினர். இந்நிலையில் அவர், காலமானதாக பிஎன்பி கட்சி அறிவித்துள்ளது.
அவரது மறைவுக்கு உலக நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். கலிதா ஜியாவின் மறைவு செய்தி வருத்தமளிப்பதாக பிரதமர் மோடி சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.. அவரது குடும்பத்திற்கும் வங்கதேச மக்களுக்கும் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக அந்நாட்டின் வளர்ச்சியிலும் இந்திய- வங்கதேச உறவை மேம்படுத்த அவர் ஆற்றிய பங்கும் குறிப்பிடத்தக்கது என்றும் பிரதமர் தெரிவித்துள்ளா்ர.





