--- --:--:-- --

புத்தாண்டு கொண்டாட்டம் – சென்னை காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடு

3

சென்னை மாநகராட்சியில் 19,000 போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாளை (டிச.31) இரவு 9 மணி முதல் 425 இடங்களில் வாகனத் தணிக்கைக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது. 30 சாலைப் பாதுகாப்புக் குழுக்கள் இருசக்கர வாகனத்தில் ரோந்து செல்வர்.

 

சென்னையில் உள்ள 100க்கும் மேற்பட்ட முக்கிய கோயில்கள், தேவாலயங்கள், இதர வழிபாட்டுத் தலங்கள், பொது இடங்களில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அரசால் அனுமதிக்கப்பட்ட மகிழ் மன்றங்கள், ரிசார்ட்கள், விடுதிகளுடன் கூடிய நட்சத்திர ஹோட்டல்கள் ஆகிய இடங்களில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பினை உறுதி செய்ய வேண்டும்.

 

பொது இடங்கள் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் உட்பட அனைத்து இடங்களிலும் பட்டாசுகள் வெடிக்கத் தடை. மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டினால் கடுமையான நடவடிக்கை; வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் –

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon