--- --:--:-- --

நாமக்கல்லில் ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்..!

3

நாமக்கல் ஆஞ்சநேயரை தரிசனம் செய்ய வெளி மாநிலம் மற்றும் மாவட்டத்தில் இருந்து ஏராளமான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். நாமக்கல் நகரில் மையப்பகுதியில் ஒரே கல்லினால் செதுக்கப்பட்ட 18 அடி உயர ஆஞ்ச நேயர் இரு கைகளையும் குப்பியவாறு சாந்த சொரூபியாக பக்தர்களுக்கு அருள் பாளித்து வருகிறார்.

 

ஆண்டு தோறும் மார்கழி மாதம் அமாவாசை மூல நட்சத்திரத்தில் வரும் ஆஞ்சநேயர் பிறந்த நாளை தமிழகம் முழுவதும் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். அதே போன்று ஆண்டுதோறும் நாமக்கல்லிலும் அனுமன் ஜெயந்தி விழாவாக கோலாகலமாக கொண்டாடப்படும்.

 

அந்த வகையில் இன்று அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி, அதிகாலை 4.40 மணிக்கு ஆஞ்ச நேயருக்கு 1 லட்சத்து 8 வடை மாலை சாத்தப் பட்டது பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று ஆஞ்சநேயரை தரிசனம் செய்தனர் அனைவரும் ஸ்ரீ ராம ஜெயம் ஸ்ரீ ராம ஜெயம் என கோஷங்களை எழுப்பினர்.

Right Menu Icon