மெழுகுவர்த்தி ஏற்றிய பக்தரால் பற்றி எரிந்த கோயில் – சீனாவில் பரபரப்பு
சீனாவின் ஜியாங்சு மாகாணத்தில் உள்ள பிரசித்தி பெற்ற பென்ஹுவாங் மலைக்கோயிலில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் பிரபலமான வெஞ்சாங் மண்டபத்தின் கூரை இடிந்து விழுந்த காட்சிகள் பார்ப்போரை பதைபதைக்க வைத்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் பக்தர் ஒருவர் மெழுகுவர்த்தி ஏற்றி வணங்கிய போது இப்பயங்கரம் நடந்ததாக தகவல்.





