இந்தியா கூட்டணியை எவராலும் பிரிக்க முடியாது – செல்வப்பெருந்தகை
இந்தக் கூட்டணி என்ன ஆகப்போகுது, எந்தத் திசையில் போகப்போகுது என கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இருந்துவரும் சலசலப்பில் நிறைய பேர் குளிர்காய நினைத்தார்கள். எந்தக் காலத்திலும் இந்தக் கூட்டணியை பிரிக்க முடியாது, வலிமையாக இருக்கிறது என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
பத்திரிகையாளர் செந்தில் வேல் எழுதிய திராவிடம் 2.0 ஏன்? எதற்கு எனும் நூல் வெளியீட்டு விழா இன்று சென்னையில் நடைபெற்றது. சர். பிட்டி தியாகராயர் அரங்கத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழ் கேள்வி செந்தில் வேல் எழுதிய திராவிடம் 2.0 ஏன்? எதற்கு? நூலை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டார். நூலின் முதல் பிரதியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பெற்றுக்கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை, “அந்த காலத்தில் வட இந்தியாவிலிருந்து எப்படி படையெடுப்பு நடத்தினார்களோ அதே போல் இப்போது ED, சிபிஐ ரூபத்தில் வருகிறார்கள். எது வந்தாலும் தமிழர்கள் எதிர்கொண்டு வெற்றி பெறுவார்கள்.
இந்தக் கூட்டணி என்ன ஆகப்போகுது, எந்தத் திசையில் போகப்போகுது என கடந்த இரண்டு, மூன்று மாதங்களாக இருந்துவரும் சலசலப்பில் நிறைய பேர் குளிர்காய நினைத்தார்கள். இதற்கெல்லாம் இன்னும் ஓரிரு மணி துளிகளில் எல்லாம் அறிவிப்பு வரும். எந்தக் காலத்திலும் இந்தக் கூட்டணியை பிரிக்க முடியாது, வலிமையாக இருக்கிறது” என பேசியுள்ளார்.





