--- --:--:-- --

சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு இன்று ஆரஞ்ச் அலர்ட்..!

3

சென்னை உட்பட ஏழு மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்யும் என கணித்துள்ள வானிலை ஆய்வு மையம், தமிழகத்தில் அடுத்த ஒரு வாரத்திற்கு மழை தொடரும் எனத் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவும் காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு- வட மேற்கு திசையில் மெதுவாக நகரும் என வானிலை மையம் கணித்துள்ளது.

 

இதன் காரணமாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களிலும், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் இன்று மிக கனமழை பெய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.

 

கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலும், தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும் எனவும் கூறியுள்ளது. அதேபோல, தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களிலும், தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய மாவட்டங்களிலும் நாளை கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கணித்துள்ளது.

Right Menu Icon