--- --:--:-- --

தேமுதிக அமைக்கும் கூட்டணி வெற்றி கூட்டணியாக இருக்கும் – பிரேமலதா விஜயகாந்த்

4

தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில், இன்று அக்கட்சியின் மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. சென்னை கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் நடந்த இந்தக் கூட்டத்தில், கூட்டணி உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்ததாக சொல்லப்படுகிறது.

 

மாவட்டச் செயலாளர் கூட்டம் முடிந்து செய்தியாளர்களைச் சந்தித்த பிரேமலதா விஜயகாந்த், “தேமுதிக அமைக்கும் கூட்டணி மிகப்பெரிய கூட்டணி, தமிழ்நாடு மக்களுக்கு பக்கபலமாக இருக்கும். தேமுதிக அங்கீகரிக்கப்பட்ட கட்சி என்பதால், ஏற்கனவே முரசு சின்னம் இருக்கிறது. போதை புழக்கம் அதிகமாக இருப்பதால்தான் சமூக விரோத செயல்கள் நடக்கின்றன.

 

எனவே அரசு போதை கலாச்சாரத்தை படிப்படியாக குறைப்பதற்கு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல், பெண்கள் இரவு நேரத்திலோ, நமக்கு சம்பந்தமே இல்லாத இடத்திற்கோ தனியாக செல்லக் கூடாது. வட இந்தியர்கள் வேலைக்காக தமிழ்நாடு வரலாம். ஆனால், அவர்களுக்கு இங்கு வாக்குரிமை கொடுப்பதை தேமுதிக ஏற்காது.

 

ஜனவரி மாதம் தேமுதிக மாநாடு நடைபெற இருக்கிறது. ஒரு வேளை அதற்கு முன்னதாக கூட்டணி முடிவானால், பத்திரிகையாளர் சந்திப்பு நிகழ்த்தி அறிவிப்போம். அல்லது மாநாட்டில் அறிவிக்க வேண்டிய சூழல் இருந்தால், அன்று அறிவிப்போம். அதேசமயம், தேமுதிக அங்கம் வகிக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெறும் என்பதை மட்டும் நான் உறுதியாக சொல்கிறேன்” எனத் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon