சாமி சிலை உடைப்பு! 6 பேர் மீது வழக்குப்பதிவு!
ஈரோடு மாவட்டத்தில் ஒரு சமுதாயத்தினரின் சாமி சிலைகள் உடைக்கப்பட்டதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது சிலை உடைப்பு தொடர்பாக மகள் உட்பட 6 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஈரோடு மாவட்டம் சிவகிரி அடுத்துள்ள தொப்ப பாளையத்தில் உள்ளது பழமையான கோவில் ஒரு சமூகத்தினர் இந்த கோவிலை குலதெய்வமாக வழிபட்டு வரும் நிலையில் மற்ற சமூகத்தினரும் எங்க பழைய உரிமை கோரி வருகின்றன.
இது தொடர்பாக சில மாதங்களுக்கு முன்பு நீதிமன்றத்திலும் வழக்கு தொடுத்துள்ளனர். இந்த நிலையில் கடந்த மாதம் இந்த கோவிலின் முன்பகுதியில் 8 அடி உயரம் கொண்ட இரண்டு சாமி சிலைகள் நிறுவப்பட்டன. இரண்டு தினங்களுக்கு முன்பு தான் இந்த சிலைகளுக்கு கேட் அமைத்து சிசிடிவி கேமராவை பொருத்தி உள்ளனர். இந்த நிலையில் நள்ளிரவு முகத்தை மூடியபடி அங்கு வந்த அடையாளம் தெரியாத நபர்கள் கேட்டை உடைத்து கொண்டு உள்ளே நுழைந்து சுத்தியலை கொண்டு சிலைகளை உடைத்துள்ளனர்.
கைகளில் கட்டையுடன் இருக்கும் நபர் சிசிடிவி கேமராவை உடைக்க முயன்றார் இவை அனைத்தும் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது சிலை உடைக்கப்பட தகவல்களுடன் குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்த மக்கள் கோவில் முன் திரண்டனர். இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது இதனையடுத்து மாவட்ட கண்காணிப்பாளர் கணேசன் தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்ட காவலர்கள் அங்கு குவிக்கப்பட்டனர்.
மேலும் வருவாய் அலுவலர் கவிதா ஆர்டிஓ முருகேசன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினர். இதனுடைய சிலைகளை உடைத்து அவர்களை கைது செய்ய கோரி அம்மன் கோவில் சந்திப்பு பகுதியில் சாலைமறியல் போராட்டம் நடைபெற்றது. உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் உறுதி அளித்ததால் மறியல் கைவிடப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




