தனது குழந்தையை விற்பனை செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி குழந்தையின் தந்தை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புகார் அளித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை கிணத்துக்கடவு பகுதியில் வசிப்பவர்கள் கருப்பசாமி ரம்யா தம்பதி இவர்களுக்கு கடந்த மே மாதம் ஆண் குழந்தை பிறந்துள்ளது ரம்யா உடல் நலம் பாதிக்கப்பட்டதால் குழந்தையை கவனிக்க முடியாத கருப்பசாமி அதனை பராமரிக்குமாறு கார்த்திக் என்பவரிடம் கொடுத்துள்ளார்.
இதனிடையே உயிரிழந்த தான் குழந்தையை வளர்க்க நினைத்த கருப்புசாமி கார்த்திக்கிடம் மீண்டும் குழந்தையை கேட்டு இருந்தார். அப்போது முருகன் என்பவரிடம் தனது ஆண் குழந்தையை கார்த்திக் 40 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்து விட்டதை அறிந்து அதிர்ச்சி அடைந்தார். கார்த்திக் மீது நடவடிக்கை எடுத்து தன்னுடைய குழந்தையை பெற்று தருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கருப்புசாமி புகார் கொடுத்துள்ளார்.