டெல்லியில் போராட்டக்காரர்கள் கைது – ராகுல்காந்தி கண்டனம்
டெல்லியில் காற்று மாசுபாட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்ததற்கு கண்டனம் தெரிவித்துள்ள காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி, சுத்தமான காற்றை சுவாசிக்கும் உரிமை என்பது ஒரு அடிப்படை மனித உரிமையாகும்.
அமைதியான முறையில் போராட்டம் செய்யும் உரிமை நம் அரசியலமைப்பால் உறுதி செய்யப்பட்டுள்ளது. சுத்தமான காற்று வேண்டும் என கோரி அமைதியான முறையில் நிற்கும் குடிமக்களை ஏன் குற்றவாளிகளைப் போல நடத்தப்படுகிறார்கள்? கோடிக்கணக்கான இந்தியர்களைக் காற்று மாசுபாடு பாதிக்கிறது.
இது நம் குழந்தைகளுக்கும், தேசத்தின் எதிர்காலத்திற்கும் கேடு விளைவிக்கிறது. ஆனால், வாக்கு திருட்டு மூலம் ஆட்சிக்கு வந்த அரசாங்கத்திற்கு இதுபற்றி சிறிதும் கவலை இல்லை, இந்த பிரச்னையை தீர்க்க முயற்சிக்கவும் இல்லை.
சுத்தமான காற்றை கேட்கும் குடிமக்களைத் தாக்குவதற்குப் பதிலாக, காற்று மாசுபாட்டின் மீது உடனடியாகவும், தீர்க்கமாகவும் நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என ராகுல்காந்தி கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




