கச்சத்தீவு மீட்பு: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்
இந்தியாவுக்கு வருகைதந்துள்ள இலங்கை பிரதமரிடம் கச்சத்தீவை மீட்டுத் தர வலியுறுத்துமாறு பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
இதுகுறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில், இந்தியாவுக்கு இலங்கை பிரதமர் வருகை தந்திருக்கும் இவ்வேளையில், நாம் தொடர்ந்து வலியுறுத்தி வரும் கச்சத்தீவு மீட்பு, இந்திய மீனவர்கள் மற்றும் படகுகளை உடனடியாக விடுவித்தல், மீனவர்கள் மீது நிகழ்த்தப்படும் வன்முறை மற்றும் திருட்டுச் சம்பவங்களை தடுத்து நிறுத்துதல், பறிமுதல் செய்யப்பட்ட படகுகளை நாட்டுடைமையாக்குவதால் உண்டாகும் பாதிப்பு, கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டங்களை நடத்துதல் ஆகியவற்றை பிரதமர் மோடி எழுப்பக் கோரிக் கடிதம் எழுதியுள்ளேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




