--- --:--:-- --

காசாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பான எகிப்து மாநாடு..!

1

காசாவில் அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக எகிப்தில் திங்கட்கிழமை நடைபெறும் மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இஸ்ரேல்-ஹமாஸ் இடையே முதல் கட்ட போர் நிறுத்தம் அமலுக்கு வந்துள்ள நிலையில், படைகள் திரும்பப் பெறப்பட்டுள்ளன.

 

இந்நிலையில், அமைதிக்கான அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க எகிப்தின் ஷர்ம்-எல்-சேக் பகுதியில் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் எகிப்து அதிபர் அப்தில் அல்-சிசி தலைமையிலான மாநாடு திங்கட்கிழமை பிற்பகல் நடைபெறுகிறது.
இதில், 20-க்கும் மேற்பட்ட நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

 

இந்நிலையில், இந்த மாநாட்டில் பங்கேற்க பிரதமர் நரேந்திர மோடிக்கு டொனால்டு டிரம்ப்-பும், அல்-சிசியும் அழைப்பு விடுத்துள்ளனர். பிரதமர் அலுவலகத்துக்கு சனிக்கிழமை இரவு இந்த அழைப்பு வந்துள்ளது. 50 சதவீத வரிவிதிப்பு, ஹெச்1பி விசா கட்டண உயர்வு ஆகியவற்றால் இந்தியா-அமெரிக்கா இடையே நல்லுறவு பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அதிபர் டிரம்ப் இந்த அழைப்பை விடுத்துள்ளார்.

 

இந்த மாநாட்டில், பிரதமர் நரேந்திர மோடியின் சார்பில் வெளியுறவு இணை அமைச்சர் கீர்த்தி வரதன் சிங் கலந்துகொள்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Right Menu Icon