--- --:--:-- --

தவெக தலைவர் விஜய் பரப்புரையில் பாதுகாப்பு குறைபாடா..?

2

வெக தலைவர் விஜயின் பாதுகாப்பு குறித்து மத்திய உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. கரூரில் கடந்த 27ஆம் தேதி விஜய் பரப்புரையின்போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.

 

அந்த மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில், தவெக பொதுச் செயலாளர் ஆனந்த் தரப்பு தெரிவித்தது. இந்நிலையில், விஜயின் மக்கள் சந்திப்பு கூட்டங்களில் பாதுகாப்பு குறைபாடு இருந்ததா என, அவரின் பாதுகாப்பு அதிகாரிகளிடம் உள்துறை அமைச்சகம் விளக்கம் கேட்டிருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

 

விஜயின் Y பிரிவு பாதுகாப்பு அதிகாரிகளின் செயல்பாடுகள் திருப்திகரமாக இருந்ததா? என்றும் கேட்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மார்ச் மாதம் முதல் விஜய்க்கு Y பிரிவு பாதுகாப்பை, மத்திய உள்துறை அமைச்சகம் வழங்கி வருகிறது.

 

8 முதல் 11 பேர் கொண்ட துப்பாக்கி ஏந்திய மத்திய ரிசர்வ் படை கமாண்டோக்கள் சுழற்சி முறையில் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே விஜய்க்கான பாதுகாவலர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.

Right Menu Icon