--- --:--:-- --

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய புதிய நடைமுறை!

2

ஆர்சிடிசி (IRCTC) என்பது இந்திய ரெயில்வே கேட்டரிங் மற்றும் சுற்றுலா கழகத்தின் (Indian Railway Catering and Tourism Corporation) சுருக்கமாகும். இது ரெயில் டிக்கெட் முன்பதிவு, ரெயில் பயணம் மற்றும் சுற்றுலா பேக்கேஜ்கள் போன்ற சேவைகளை வழங்க இந்திய ரயில்வேயின் ஒரு துணை நிறுவனமாகும்.

 

ஆன்லைனில் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயம் என்ற புதிய விதிமுறை வரும் அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது. டிக்கெட் முன்பதிவு செய்வதற்கான விதிகளை ரயில்வே நிர்வாகம் மாற்றி அமைத்துள்ளது.

 

புதிய விதிமுறைகளின்படி, டிக்கெட் முன்பதிவு தொடங்கிய முதல் 15 நிமிடங்களுக்கு ஆதார் சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. உண்மையான பயனாளர்கள் முன்பதிவு முறையில் பலன் பெறுவதற்காகவும், அங்கீகரிக்கப்படாத நபர்களால் நடைபெறும் முன்பதிவுகளை தடுக்கும் வகையிலும் இந்த நடைமுறை அக்டோபர் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளது. அதேநேரம், அங்கீகரிக்கப்பட்ட ரயில்வே முகவர்களுக்கான 10 நிமிட கட்டுப்பாடு தொடர்ந்து அமலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

கடந்த ஜூலை 1ஆம் தேதி தட்கல் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அடையாளம் கட்டாயமாக்கப்பட்ட நிலையில், தற்போது, ஜெனரல் டிக்கெட் முன்பதிவுக்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

 

பொது ரெயில் டிக்கெட்டுக்கான முன்பதிவு தினமும் நள்ளிரவு 12.20 மணிக்குத் தொடங்கி இரவு 11.45 மணி வரை நீடிக்கும். அதேபோல் ரெயிலில் பயணம் செய்ய உள்ள நபருக்கு பயணம் செய்யும் தேதிக்கு 60 நாட்களுக்கு முன்பு பொது டிக்கெட்டுகளுக்கான முன்பதிவு தொடங்கும் என்றும் இந்தியன் ரெயில்வே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Right Menu Icon