ஆண்களை விட மகளிருக்கு அதிக பரிசு: ஐசிசி
கிரிக்கெட்டில் பரிசுப் பணம் தொடங்கி அங்கீகாரம் வரை பாலின பாகுபாடு காட்டப்படுவதாக குற்றச்சாட்டு உள்ளது. இதை சரிசெய்யும் முயற்சியாக, மகளிர் உலகக் கோப்பை பரிசுத் தொகையை ஐசிசி பல மடங்கு உயர்த்தியுள்ளது.
சாம்பியனுக்கு 39 கோடி, 2-ம் இடம் பிடிக்கும் அணிக்கு ரூ.20 கோடியும், ஒட்டுமொத்த பரிசுத் தொகை ரூ.122 கோடியும் வழங்கப்படும். இத்தொகை 2023 ஆண்கள் WC-க்கு வழங்கப்பட்ட தொகையை (ரூ.83 கோடி) விட அதிகமாகும்.






