ஹைட்ரஜன் குண்டு விரைவில் வெடிக்கும்: ராகுல்
வாக்கு திருட்டு விவகாரத்தில் முதலில் வெளியிட்டது அணுகுண்டுதான், விரைவில் பெரிய ஹைட்ரஜன் குண்டு வெடிக்கப்போகிறது என ராகுல் காந்தி கூறியுள்ளார்.
பீகாரில் ‘வாக்காளர் அதிகார யாத்திரை’ நிறைவு விழாவில் பேசிய அவர், பாஜக தலைவர்கள் இந்த விவகாரத்தில் தயாராக இருக்க வேண்டும் எனக் குறிப்பிட்டார். வாக்கு திருட்டு பற்றிய உண்மையை மக்கள் விரைவில் அறிவார்கள் எனவும் ராகுல் தெரிவித்தார்.





