--- --:--:-- --

காலை உணவுத்திட்டம் செலவு அல்ல, இது சமூகத்திற்கான முதலீடு – முதல்வர் ஸ்டாலின்

2

கரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கும் காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இந்தத் திட்டம் தமிழ்ச் சமுதாயத்துக்கான முதலீடு என்று பெருமிதம் தெரிவித்தார். தமிழ்நாடு முழுவதும் அரசு தொடக்கப் பள்ளிகளிலும், கிராமப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் ஏற்கனவே செயல்பாட்டில் உள்ளது.

 

இந்த திட்டத்தின் மூலம் 20 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர். இந்நிலையில், நகரப் பகுதிகளில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் காலை உணவுத் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை மயி​லாப்​பூரில் உள்ள புனித சூசையப்​பர் தொடக்​கப்​ பள்ளி​​யில் நடை​பெற்ற விழா​வில் இத்திட்டத்தை தொடங்கி வைத்து மாணவ, மாணவிகளுக்கு உணவு பரிமாறினார். அப்போது, பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

 

அதைத் தொடர்ந்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் மாணவ, மாணவிகளுடன் சேர்ந்து உணவு சாப்பிட்டனர். முதலமைச்சர் தனக்கு அருகில் அமர்ந்திருந்த மாணவிக்கு உணவு ஊட்டி விட்டார். இந்தத் திட்டத்தின் மூலம், நகர்ப் பகுதிகளில் உள்ள 2 ஆயிரத்து 430 பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் 3 லட்சத்து 5 ஆயிரம் மாணவ, மாணவிகள் பயன்பெற உள்ளனர்.

Right Menu Icon