பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை.. வெளியான புதிய அறிவிப்பு..!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் கடந்த ஜூன் மாதம் திறக்கப்பட்டது. ஜூன், ஜூலை மாதங்களில் அரசு விடுமுறை ஏதும் இல்லாமல் தொடர்ந்து மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் சூழல் இருந்தது. ஆனால் ஆகஸ்ட் மாதம் பள்ளி மாணவர்களுக்கு ஆறுதலாக அமைந்தது. அதற்கு காரணம் சுதந்திர தினம், விநாயகர் சதூர்த்தி என வார நாட்களில் அரசு விடுமுறை இருந்ததால் அவர்களுக்கு கொண்டாட்டமாக இருந்தது.
அதிலும் குறிப்பாக சுதந்திர தினம் வெள்ளிக்கிழமை வந்தால் பள்ளிகளுக்கு வெள்ளி, சனி, ஞாயிறு என தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறையாக அமைந்து. இதனால் மாணவர்களின் பெற்றோர்களும் விடுமுறை நாட்களுக்கு ஏற்றார்போல் பயணங்களை திட்டமிட்டனர்.
இந்நிலையில் அடுத்த மாதம் (செப்டம்பர்) முதல் வாரத்தில் பள்ளிகளுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளதால் மாணவர்கள் மீண்டும் குஷியில் உள்ளனர். செப்டம்பர் 5 ஆம் தேதி மிலாடி நபி திருநாளை முன்னிட்டு அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மிலாடி நபி வெள்ளிக்கிழமையில் வருவதால் அதற்கு அடுத்த நாட்களான சனி, ஞாயிறு வருவதால் தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வரஉள்ளதால் பெற்றோர்கள் தற்போதே வெளியூர் பயணங்களுக்கு திட்டமிடலாம்.
காலாண்டு தேர்வுக்கு முன் மாணவர்களுக்கு தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை கிடைக்க உள்ளதால் அவர்களுக்கு ஆறுதலாக இருக்கும். விடுமுறை கொண்டாட்டத்தை முடித்தப்பின் மாணவர்கள் காலாண்டு தேர்வுக்கு உத்வேகமாக தயாராக இது நல்ல வாய்ப்பாக இருக்கும்.





