‘INDIA’ கூட்டணியில் இதுவரை யாரும் பரிசீலனையில் இல்லை!
துணை ஜனாதிபதி வேட்பாளர் பரிசீலனையில் இதுவரை யாரும் இல்லை என ‘INDIA’ கூட்டணி தெரிவித்துள்ளது. NDA கூட்டணியில், CP ராதாகிருஷ்ணன் களமிறங்கியுள்ள நிலையில், வேட்பாளர் தேர்வில் ‘INDIA’ கூட்டணி தீவிரம் காட்டியுள்ளது.
இதனிடையே, திமுக MP திருச்சி சிவா பரிசீலனையில் உள்ளதாக NDTV செய்தி வெளியிட்டது. அதனை மறுத்துள்ள ‘INDIA’ கூட்டணி, வேட்பாளருக்கான ஆலோசனை தொடர்வதாகவும் விளக்கம் அளித்துள்ளது.





