அதிக கட்டணம்: 18 ஆம்னி பஸ்களுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம்
தொடர் விடுமுறையையொட்டி, சொந்த ஊர்களுக்கு செல்பவர்களிடம் அதிக கட்டணம் வசூலித்த 18 ஆம்னி பேருந்துகளுக்கு ரூ.1.26 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டது.
மீனம்பாக்கம் – தாம்பரம் வட்டார போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் மீனம்பாக்கம், பெருங்களத்தூர், கிளாம்பாக்கம் ஆகிய இடங்களில் இருந்து புறப்படும் ஆம்னி பஸ்களில் சோதனை மேற்கொண்டனர்.
இதில் அதிகமாக கட்டணம் வசூலித்த 18 பேருந்துகளுக்கு ரூ.1 லட்சத்து 26 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. பயணிகளிடம் வசூலித்த கூடுதல் கட்டணம் திருப்பி கொடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




