எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடும்: கார்கே
ஆட்சியில் தொடர எத்தகைய சீர்கேட்டிலும் பாஜக ஈடுபடுமென கார்கே காட்டமாக விமர்சித்துள்ளார். பிஹாரில் 65 லட்சம் பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டிய அவர், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தால் யார் பலனடைகின்றனர் என்பது தெளிவாகி உள்ளதாக தெரிவித்தார்.
மேலும், மோசடிகளை அம்பலப்படுத்தும் எதிர்க்கட்சிகளின் போராட்டம் ஜனநாயகம், அரசியலமைப்புச் சட்டத்தை காப்பதற்கானது எனக் கூறினார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




