--- --:--:-- --

திருவாடானை பெரிய கோவிலில் 13ம் ஆண்டு 1008 திருவிளக்கு பூஜை நடைபெற்றது!

14

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானையில் அருள்மிகு சிநேகவல்லி அம்பாள் உடனமர் அருள்மிகு ஆதி ரெத்தினேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமராவதிபுதூர் ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி, ஸ்ரீ சாரதா சேவா சமிதி திருவாடானை, இணைந்து 13ம் ஆண்டு 1008 மகா திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

முன்னதாக சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி மாணவிகள் இறைவணக்க பாடல் பாடி துவங்கினர். வரவேற்புரையாக மத்திய அரசு வழக்கறிஞர் சவுந்தர பாண்டியன் வரவேற்புரை ஆற்றினார்.ஸ்ரீ சாரதா நிகேதன் மகளிர் கல்லூரி சாரதேஸ்வரிபிரியா நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். தேவஸ்தான சரக பொறுப்பாளர் பாண்டியன் தலைமையில், நெய்தல் அறக்கட்டளை ராமேஸ்வரம் நமோ சிவகுமார், சந்திரசேகர குருக்கள், ராமரத்தினம் முத்துவேல் ஆகியோர் முன்னிலையில் திருவிளக்கு பூஜையானது நடைபெற்றது.

 

இந்நிகழ்வில் 1000க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி சுவாமி தரிசனம் செய்தனர். குத்துவிளக்கு பூஜையின் போது குங்குமம் பல்வேறு தீர்த்தங்கள் மற்றும் மலர்களால் அர்ச்சனை செய்து தீபாராதனை காண்பித்து பெண்கள் வழிபட்டனர். இந்த குத்துவிளக்கு பூஜையானது உலக நன்மை வேண்டியும், உலக மக்கள் சுகாதாரத்துடன் வாழவும் வேண்டி நடைபெற்றதாக தெரிவித்தனர்

Right Menu Icon