கவின் மரணத்தின்போது விஜய் எங்கே போனார் : ஷாநவாஸ்
கவின் ஆணவப்படுகொலைக்கு, கண்டனம் மட்டுமல்ல இரங்கல் கூட விஜய் தெரிவிக்காதது சர்ச்சையானது. இந்நிலையில், கட்சி தொடங்கியதில் இருந்து தலித் மக்களின் பிரச்னைக்காக விஜய், ஒரு போராட்டம் நடத்தியது உண்டா என ஆளூர் ஷாநவாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
கவின் கொல்லப்பட்ட 3-வது நாள் திருமா நெல்லையில் இருந்தார். விஜய் எங்கே போனார்; வாய்கூட திறக்கவில்லை. பிறகு எப்படி தலித் வாக்குகள் அவருக்கு போகும் என சாடினார்.






