ஆடிப்பெருக்கை முன்னிட்டு நகைக்கடைகளில் குவிந்த மக்கள்!
ஆடிப் பெருக்கை முன்னிட்டு சென்னை மற்றும் புறநகர் மாவட்டங்களில் உள்ள நகைக் கடைகளில் அதிகாலையிலேயே மக்கள் கூட்டம் அலைமோதியது. ஆடிப் பெருக்கன்று தங்கம் வாங்கினால் செல்வம் பெருகும் என்பது மக்களின் நீண்டநாள் நம்பிக்கை. இதன் காரணமாக, ஒவ்வொரு ஆண்டும் ஆடிப் பெருக்கின்போது நகைகள் வாங்குவதை மக்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர்.
அதன்படி, இந்த ஆண்டும் சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் உள்ள அனைத்து முக்கிய நகைக் கடைகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. குறிப்பாக, பெண்கள் அதிக அளவில் ஆர்வத்துடன் நகைகள் வாங்க வந்தனர். தங்கம் மற்றும் வைர நகைகள் விற்பனை இந்த ஆண்டு சிறப்பாக இருப்பதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆடிப் பெருக்கையொட்டி, ஒரு சவரன் தங்கம் ரூ.74,320-க்கும், ஒரு கிராம் தங்கம் ரூ.9,290-க்கும் விற்கப்பட்டது. இந்த விலை ஏற்றம் இருந்தபோதிலும், தங்கம் வாங்குவதில் மக்கள் ஆர்வம் குறைவின்றி காணப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




