இ.பி.எஸ் சுற்றுப்பயணம் – முன்னேற்பாடுகள் தீவிரம்
ராணிப்பேட்டை, ஆற்காடு ஆகிய இரு தொகுதிகளில் ஆகஸ்டு 19ம் தேதி, எடப்பாடி பழனிசாமி மக்களை மீட்போம், தமிழகத்தை காப்போம் எனும் தலைப்பிலான சுற்றுப்பயண நிகழ்வில் கலந்து கொள்கிறார்.
இதற்கான முன்னேற்பாடுகள் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட அ.தி.மு.க மாவட்ட செயலாளர் எஸ்.எம்.சுகுமார் தலைமையில் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு உரிய அனுமதி, பாதுகாப்பு வழங்க வேண்டி எஸ்.பி.யை நேரில் சந்தித்து அ.தி.மு.க.,வினர் மனு அளித்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




