மத்திய அரசு அலுவலகங்களில் ஆயில், சர்க்கரை போர்டு!
மத்திய அரசு அலுவலகங்கள், ஹாஸ்பிடல்கள், விமான நிலையங்கள், ரயில் நிலையங்கள் உள்ளிட்டவற்றில் விரைவில் ஆயில் மற்றும் சர்க்கரை போர்டு வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நுழைவு வாயில், காத்திருப்பு இடம், உணவு அறை உள்ளிட்டவற்றில் இவை வைக்கப்படவுள்ளன. அவற்றில் உணவு, ஸ்நாக்சில் இருக்கும் எண்ணெய், சர்க்கரை அளவு விவரம் இருக்கும். மக்களின் ஆரோக்கியத்தை பாதுகாக்க இம்முயற்சி எடுக்கப்பட்டுள்ளது.






