டிஎன்பிஎஸ்சி குரூப் 2, 2ஏ தேர்வு தேதி அறிவிப்பு!
தமிழ்நாடு அரசு துறைகளில் காலியாக உள்ள இடங்களுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தேர்வு நடத்தி தகுதியானவர்களை தேர்வு செய்து வருகிறது. அந்த வகையில், சார் பதிவாளர், முதுநிலை வருவாய் ஆய்வாளர், வனவர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர் உள்ளிட்ட பதவிகளுக்கான குரூப்-2 மற்றும் குரூப் 2 ஏ தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
குரூப் 2 பணியிடங்களுக்கு 50 இடங்கள், குரூப் 2ஏ பணியிடங்களுக்கு 595 இடங்கள் என மொத்தம் 645 காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், இதற்கான முதல்நிலைத் தேர்வு செப்டம்பர் 28 ஆம் தேதி நடைபெற உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வுக்கு இன்று முதல் ஆகஸ்ட் 13 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சி-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தேர்வர்கள் தேர்வுக் கட்டணத்தை ’யுபிஐ’ மூலம் செலுத்தலாம் என்றும் அரசுத் துறை நிறுவனங்களிடம் இருந்து காலிப் பணியிடங்கள் அதிகரித்து பெறப்படும்பட்சத்தில் கலந்தாய்வுக்கு முன்பாக காலிப்பணியிடங்கள் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என்றும் டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது.





