பூமியை நோக்கி புறப்பட்ட சுபான்ஷூ சுக்லா
ஜூன் 25-ம் தேதி இந்தியாவின் சுபான்ஷு சுக்லா உட்பட 4 பேர் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு சென்றனர். அவர்களின் 14 நாட்கள் ஆராய்ச்சி பணி முடிவடைந்த நிலையில் அவர்கள் பூமிக்கு திரும்புகின்றனர்.
அதன்படி டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பூமி திரும்ப உள்ள நிலையில் விண்வெளி நிலையத்திலிருந்து விண்கலம் தனியாக பிரிந்தது. சுமார் 24 மணி நேர பயணத்திற்கு பின் நாளை 3 மணியளவில் 4 பேரும் பூமியை வந்தடைய உள்ளனர்.





