செல்வப்பெருந்தகை புனிதநீர் ஊற்ற அனுமதி மறுப்பு..!
வல்லக்கோட்டை சுப்பிரமணிய சாமி திருக்கோவில் குடமுழுக்கு விழாவில் விமான கலசத்தில் புனிதநீர் ஊற்றும் பகுதிக்கு தமிழிசை அனுமதிக்கப்பட்ட நிலையில், செல்வப்பெருந்தகைக்கு அனுமதி வழங்கப்படவில்லை.
இது குறித்து பேசிய செல்வப்பெருந்தகை, என்னை தடுத்து நிறுத்தியது ஏன் என அதிகாரிகளைத் தான் கேட்க வேண்டும் என்றார். மேலும் 2000 ஆண்டுகளாக இந்த பிரச்னை உள்ளது, அதனை ஒரே இரவில் தீர்க்க முடியாது எனவும் கூறினார்.
📱 Share on WhatsApp
𝕏 Share on X





