பரந்தூரில் ரயில் நிலையம்: சோமன்னா
பரந்தூரில் புதிய ஏர்போர்ட் வரவுள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் தொடர்ந்து கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், காஞ்சிபுரத்தில் புதிய ரயில் நிலையத்தை ரயில்வே இணையமைச்சர் சோமன்னா ஆய்வு செய்தார்.
இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர், பரந்தூரில் ஏர்போர்ட் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வரும் நிலையில், அங்கு புதிய ரயில் நிலையம் அமைக்கும் திட்டமும் உள்ளதாக தெரிவித்துள்ளார்.





