--- --:--:-- --

நடிகர் ஸ்ரீகாந்த் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்ன?

2

போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக சென்னையில் உள்ள தனியார் பாரில் நடந்த அடிதடி வழக்கில் அதிமுக ஐடி பிரிவு முன்னாள் நிர்வாகி பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார்.பிரசாத்தின் செல்போனை பறிமுதல் செய்த காவல் துறையினர், அதில் உள்ள வாட்ஸ் அப் தரவுகளை ஆய்வு செய்துள்ளனர்.

 

அப்போது அவருக்கு போதைப்பொருள் சப்ளை செய்த பிரதீப் என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் நடத்திய விசாரணையில், நடிகர் ஸ்ரீகாந்த் ‘தீங்கரை’ என்ற படத்தில் நடித்து வருவதாகவும், இந்தப் படத்தை தயாரித்து வரும் பிரசாத், ஸ்ரீகாந்துக்கு போதைப்பொருள் தேவைப்படுவதாகக் கூறி, தன்னிடம் இருந்து வாங்கி சென்றதாகவும் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார்.

 

இதைத் தொடர்ந்து நடிகர் ஸ்ரீகாந்தை நுங்கம்பாக்கம் காவல்நிலையத்தில் வைத்து விசாரணை நடத்திய போலீசார், அவர் போதைப் பொருள் பயன்படுத்தினாரா என்பதை அறிவியல் பூர்வமாக ஆய்வு செய்ய ரத்த மாதிரிகளை சோதனைக்கு அனுப்பினர். இதில், நடிகர் ஸ்ரீகாந்த் போதைப்பொருள் பயன்படுத்தியது உறுதியான நிலையில், அவரை கைது செய்த போலீசார், இந்த வழக்கில் 3வது குற்றவாளியாக சேர்த்தனர்.

 

இதையடுத்து, எழும்பூர் 14ஆவது பெருநகர நீதிபதி முன்பாக, நடிகர் ஸ்ரீகாந்த் ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, நடிகர் ஸ்ரீகாந்தை அடுத்த மாதம் 7-ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். ஸ்ரீகாந்த் 40 முறை போதைப்பொருளை வாங்கி இருப்பதாகத் தெரிகிறது.

 

அதற்காக பிரதீப்புக்கு நடிகர் ஸ்ரீகாந்த் Gpay மூலமாக 4 லட்சத்து 72 ஆயிரம் ரூபாய் பணத்தை பரிவர்த்தனை செய்திருப்பதும் தெரியவந்துள்ளது.இந்நிலையில் போதைப் பொருளை யாருக்கு விற்பனை செய்யவில்லை எனவும் , தான் மட்டும் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், வெளிநாடு செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் , என்னுடைய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதியிடம் ஸ்ரீகாந்த் கோரிக்கை வைத்தார்.அதை ஏற்க மறுத்து, ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி , போதைப் பொருள் தடுப்பு வழக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

 

இதனையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் இன்று ஜாமின் மனுதாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.இந்நிலையில் போதைப் பொருளை யாருக்கு விற்பனை செய்யவில்லை எனவும் , தான் மட்டும் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

 

மேலும், வெளிநாடு செல்ல மாட்டேன், வழக்கு விசாரணைக்கு முழுமையாக ஒத்துழைப்பேன் , என்னுடைய குழந்தைக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என நீதிபதியிடம் ஸ்ரீகாந்த் கோரிக்கை வைத்தார்.அதை ஏற்க மறுத்து, ஜாமீன் வழங்க மறுத்த நீதிபதி , போதைப் பொருள் தடுப்பு வழக்கு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் ஜாமின் மனுவை தாக்கல் செய்ய அறிவுறுத்தினார்.

 

இதனையடுத்து நடிகர் ஸ்ரீகாந்த் தரப்பில் இன்று ஜாமின் மனுதாக்கல் செய்து உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர் ஸ்ரீகாந்துக்கு முதல் வகுப்பு சிறைக்கு அனுமதி அளித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon