--- --:--:-- --

மகளிர் உரிமைத் தொகை யாருக்கெல்லாம் கிடைக்கும்..?

2

மிழகத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 மகளிர் உரிமை தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் செயல்படுத்தப்படும் மகளிர் உரிமை தொகை திட்டத்தில் விடுபட்டவர்கள் ஜூலை 15ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், குடும்ப தலைவி அல்லாத பெண்களுக்கும் இந்த உதவி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

 

தஞ்சையில் நடைபெற்ற நிகழ்ச்சியின் போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களின் குறைகளை தீர்க்க உங்கள் பகுதிகளிலேயே ஜூலை 15ஆம் தேதி முதல், தமிழ்நாடு முழுவதும் உங்களுடன் ஸ்டாலின் முகாம்கள் நடத்தப்படும். கலைஞர் மகளிர் உரிமை திட்டத்தில் விடுபட்ட தகுதியுள்ள பெண்கள் இந்த முகாம்களின் உங்களின் விண்ணப்பங்களை நீங்கள் நிச்சயமாக தரலாம் என்று பேசினார்.

 

மேலும், இப்படி நீங்கள் தரும் விண்ணப்பங்கள் மீது 45 நாட்களுக்குள் முடிவெடுக்கப்படும். ஜூலை 2வது வாரம் தொடங்கி அக்டோபர் மாதம் வரை இந்த முகாம்கள் நடக்கும் என அறிவித்தார்.அதாவது ஏற்கனவே விண்ணப்பித்து கிடைக்காத, ஆனால் தகுதியுள்ள பெண்கள் மற்றும் புதிதாக விண்ணபிப்பவர்கள் இம்முகாமில் பங்கேற்று விண்ணப்பிக்கலாம் என்று தெளிவுப்படுத்தப்பட்டுள்ளது.

 

இந்த நிலையில், ஒரு குடும்பத்தின் தலைவி மட்டுமே இதற்கு விண்ணபிக்க வேண்டும் என்பது இல்லை என்றும், ஒரு குடும்பத்தில் தாய் இறந்துவிட்ட நிலையில், அந்த குடும்பத்தில் 21 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளை இருக்கும் என்றால், அவரும் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம்.விவாகரத்து பெற்று தனியாக வாழும் பெண்களும், தனியாக ரேஷன் அட்டை வைத்திருந்தால் இந்த திட்டத்துக்கு விண்ணப்பிக்கலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon