--- --:--:-- --

தமிழகத்தில் நாளை முதல் 5 நாட்களுக்கு இயல்பைவிட 3° செல்சியஸ் வெப்பம் அதிகரிக்கும்..!

1

மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழ்நாட்டில் வரும் 28-ஆம் தேதி வரை ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மழை பெய்துள்ளது. புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.

 

இந்நிலையில் “வரும் 24ஆம் தேதி வரை அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் காரணமாக, அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் வரை அதிகமாக இருக்கும் என்றும், இதன் காரணமாக, தமிழ்நாட்டின் ஓரிரு பகுதிகளில் அசௌகரியம் ஏற்படலாம் எனவும் வானிலை மையம் கூறியுள்ளது.

 

இது தொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:-நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 36-37° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 28-29° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon