பட்டியலின மக்களுக்கு பாதுகாப்பில்லா ஆட்சி: நயினார்
பட்டியலின மக்கள் மீதான வன்முறைகள் திமுக ஆட்சியில்தான் கொடூர உச்சங்களை தொட்டுள்ளதாக நயினார் நாகேந்திரன் விமர்சித்துள்ளார். கன்னியாகுமரியில் மாற்று மதப்பெண்ணை காதலித்து திருமணம் செய்ய இருந்த பட்டியலின இளைஞர் மர்மமான முறையில் தூக்கிட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
பெண்ணின் உறவினர்கள் திமுகவில் உள்ளதால் வழக்கு முறையாக விசாரிக்கப்படுமா என்ற அச்சம் உள்ளதாகவும் கூறியுள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




