பிரதமருடன் ஏர் இந்தியா CEO சந்திப்பு..!
பிரதமர் மோடியை ஏர் இந்தியா CEO கேம்ப்பெல் வில்சன் சந்தித்து விபத்து குறித்து விளக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. அகமதாபாத் சென்ற PM மோடி, விபத்து நடந்த பகுதியை பார்வையிட்டு, காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
தொடர்ந்து உயரதிகாரிகளுடன் அவசர ஆலோசனையும் நடத்தியிருந்தார். இந்தச் சூழலில், விபத்துக்கான காரணம் குறித்து பிரதமரை சந்தித்து கேம்ப்பெல் வில்சன் விவரித்துள்ளார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




