தமிழ்நாட்டில் மேலும் 3° செல்சியஸ் வரை உயரப்போகும் வெப்பநிலை..!
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகப் பல்வேறு இடங்களில் மழை பெய்ததால் வெயிலின் தாக்கம் குறைவாக இருந்து வந்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் பல்வேறு இடங்களில் வெயில் வாட்டி வதைத்தது. அந்த வகையில், நேற்று தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவையிலும் மழை பெய்துள்ளது.
காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவியது.தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஓரிரு இடங்களில் இயல்பை விட 2-3° செல்சியஸ் அதிகமாக இருந்தது. ஏனைய தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை ஒட்டி இருந்தது. அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 39.4° செல்சியஸ் வெப்பம் பதிவானதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




