பிரபாஸ் படத்தில் இருந்து விலகியது ஏன், ஓபனாக கூறிய நடிகை தீபிகா படுகோனே..!
சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள திரைப்படம் ஸ்பிரிட். இப்படத்திற்கான அறிவிப்பு வந்த போது தீபிகா படுகோன் நாயகியாக நடிக்க உள்ளார் என கூறப்பட பின் சில காரணங்களால் வெளியேறியுள்ளார்.
இப்படி ஒரு விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வந்த நிலையில் நடிகை தீபிகா படுகோனே இப்படம் குறித்து பேசியுள்ளார்.அதில் அவர், சமீபத்தில் ஒரு இயக்குனர் கதை சொன்னார், Creativityஆக படத்தின் கதை எனக்கு பிடித்தது. சம்பளம் பற்றி பேசும்போது எனக்கு அவ்வளவு ஒதுக்க முடியாது, நாயகனுக்கு அதிகம் இருப்பதால் உங்களுக்கு இவ்வளவு முடியாது என்றனர்.
அப்போது சரி டாடா பாய் பாய் என்றேன், அந்த நடிகரின் சமீபத்திய படங்களை விட எனது படங்கள் நன்றாகவே ஓடியுள்ளது. எனது மார்க்கெட் பற்றி எனக்கு தெரியும் என பேசியுள்ளார். ஆனால் கதை வெளியிட்டுவிட்டார் என்று வந்த குற்றச்சாட்டு குறித்து எதுவும் பேசவில்லை.





