--- --:--:-- --

தமிழகத்தில் 6 மாவட்டங்களில் இன்று மிக கனமழை..!

2

டமேற்கு வங்கக்கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் நிலவும் நிலையில், தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், கோவை, நீலகிரி, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரியின் சில பகுதிகளில் கன முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.மேலும் திருப்பூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளது.தென்மேற்கு வங்கக்கடலில் சூறைக்காற்று மணிக்கு 60 கிலோமீட்டர் வேகத்தில் வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் அந்தப் பகுதிக்குச் செல்ல வேண்டாம் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

 

Right Menu Icon