நாம் தமிழர் கட்சியில் இணைந்த திமுக மாவட்டத் தலைவர்..!
கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக வணிகர் பிரிவு மாவட்டத் தலைவர் சர்புதீன் அக்கட்சியில் இருந்து விலகியுள்ளார். கள்ளக்குறிச்சி மாவட்ட திமுக நிர்வாகிகள் கூட்டத்தில் பீர் சப்ளை உள்ளிட்ட சர்ச்சைகள் அடுத்தடுத்து வெடித்தது.
குறிப்பாக, பலர் முக்கிய பொறுப்புகளை பெற நினைப்பதால், உட்கட்சி மோதல் வெடித்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் திமுகவிலிருந்து விலகிய சர்புதீன், சீமான் முன்னிலையில் நாதகவில் இணைந்துள்ளார்.






